ஒரு
மகிழ்ச்சியான விவரத்துடன்
இந்த Blog
- ஐ
ஆரம்பிக்கின்றேன்.
வாண்டுமாமா
அவர்களின் பெரும்பாலான
புத்தகங்கள் இதற்கு முன்னர்
வானதி மற்றும் பழனியப்பா
பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டன.
தற்போது
வாண்டுமாமாவின் கீழ்க்கண்ட
ஆறு புத்தகங்களை கவிதா
பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கின்றனர்:
1.பன்னாட்டு
பல்சுவைக் கதைகள்.
2.வேடிக்கை
விநோதக் கதைகள்.
3.நம்பிக்கை
தரும் நவரசக் கதைகள்.
4.மதிநுட்பக்
கதைகள்.
5.நகரங்களின்
கதை.
6.ஏன்?எங்கே?எப்படி?
முதல்
4 புத்தகங்களும்
சிறுகதைத் தொகுப்புகளாகும்.
பெரும்பாலான
கதைகள் கோகுலம்,கல்கி
மற்றும் பூந்தளிரில் வந்தவை .
அனைத்துக்
கதைகளிலும் நம் அபிமான
ஓவியர்கள் செல்லம்,மணியம்
செல்வன்,
ரமணி
போன்றோரின் கண்கவர் ஓவியங்கள்
இடம் பெற்றுள்ளன.
எனவே
30,40
வருடங்களுக்கு
முந்தைய Nostalgic
எண்ணங்களில்
நீந்த நினைக்கும் நண்பர்கள்
உடனே இந்தப் புத்தகங்களை
வாங்க வேண்டுகிறேன் .
உங்கள்
குழந்தைகளுக்கும் வாண்டுமாமாவின்
மந்திர எழுத்துக்களை அறிமுகம்
செய்ய ஒரு வாய்ப்பு.
நகரங்களின்
கதை :
இதில்
பிரசித்தி பெற்ற நகரங்களைப்
பற்றிய விவரங்களையும் ,அந்த
நகரங்கள் சம்பந்தப் பட்ட
புராண மற்றும் வரலாற்றுக்
கதைகளையும் வாண்டுமாமா
சுவாரசியமாகக் கொடுத்திருக்கிறார்.
ஏன்?எங்கே?எப்படி?
: இதில்
மூளைக்கு வேலை தரும் புதிர்,விடுகதை
மற்றும் விளையாட்டுக்களை
வாண்டுமாமா அவருக்கே உரிய
பாணியில் அளித்திருக்கிறார்
.
பின் அட்டை:
கண்கவர் ஓவியங்கள்:
புத்தகம்
ஒன்றின் விலை ரூ.350.
அனைத்துப்
புத்தகங்களையும் வாங்கினால்
விலைக்குறைப்புக்கு வாய்ப்புள்ளது.
கவிதா
பதிப்பகத்தினரின் தொலைபேசி
எண்: 044
24364243 , 24322177.
கவிதா
பதிப்பகத்தினர் (வாண்டுமாமாவின்
) மேலும்
4 புத்தகங்களை
விரைவில் வெளியிட இருக்கின்றனர்.
புத்தகங்களின்
விற்பனையைப் பொறுத்து மற்ற
புத்தகங்களும் வெளிவர
வாய்ப்புள்ளது.
எனவே
வாண்டுமாமாவின் தீவிர ரசிகர்
நீங்கள் என்பதை நிரூபிக்கும்
தருணமிது!
Nice start for blog...hope to continue for our own good..☺☺as a big fan of vaandumama will definitely buy these books..and the drawings looks like the drawings similar to kanava nijama..thanks once again for the info
ReplyDeleteThanks Krishna.
Deleteநல்ல துவக்கம் சார். எதிர் பார்த்தது போலவே ஓவியத்தில் தனிக்கவனம் செலுத்தியுள்ளீர்கள். காமிக்ஸ் ஓவியங்கள்/ஓவியர்கள் பற்றிய உங்களின் ஆழமானதோர் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteThanks Soundar.
Deleteவாழ்த்துகள் நிதிஷ்.
ReplyDeleteதொடர்ந்து பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
Thanks Viswa Sir.
Deleteநண்பரே உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...அதுவும் உங்கள் முதல் பதிவிலேயே திரு வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி...அவருடைய இடத்தை நிரப்பக்கூடிய வேறொரு சிறுவர் எழுத்தாளர் இன்னமும் வரவில்லை...நன்றி... KUMAR
ReplyDeleteஉண்மையிலேயே இஃது இனிய செய்திதான்!
ReplyDeleteகுமார் அங்கமுத்து அவர்கள் கூறியது போல, முதல் பதிவையே வாண்டுமாமாவுடன் நீங்கள் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி!
அதே நேரம், இந்த இடுகைக்கு நீங்கள் 'வாண்டுமாமா' என்று பகுப்பு (Label) கொடுத்திருந்தால் இணையத்தில் இன்னும் பலரின் கண்களுக்கு இது சென்று சேர்ந்திருக்கும். இப்பொழுது கூட நீங்கள் அதைச் செய்யலாம்.
நீங்கள் சொன்ன படி label - ஐ மாற்றி விட்டேன். நன்றி!
Deleteகௌதம் அவர்களே!
ReplyDeleteகருத்துரையிடும்பொழுது குப்பை தடுப்பான் (Spam Detector) வருகிறது. இது உங்கள் தளத்துக்குக் கருத்திடுபவர்களின் எண்ணிக்கையை வெகுவாகப் பதிக்கும் என்பதால் அதை எடுத்து விடுவது நல்லது. வலைப்பூ நடத்துதல், வடிவமைத்தல் பற்றிய மேலும் விவரங்களுக்கு http://www.bloggernanban.com/, http://ponmalars.blogspot.com/, http://karpom.com/ ஆகியவற்றைப் படித்தல் நல்லது!
Spam detector neutralized, as you advised. Thanks.
ReplyDelete