Saturday, May 3, 2014

மாய வலை !


காமிக்ஸ் என்னும் அற்புத உலகத்திற்குள் என்னை வலை வீசி இழுத்த புத்தகம் மாலைமதியில் 1-2-1976-ல் வெளி வந்த 'மரண வலை '[ வெளியீடு எண் -122]. அதுவே நான் படித்த முதல் கதைப் புத்தகம் . அநேகமாக அது வெளி வந்த நான்கைந்து வருடங்கள் கழித்துப் படித்திருப்பேன் .


 


மரண வலை AFI நிறுவனத்தினரால் ஆங்கிலத்திலும் வெளியிடப் பட்டது. இதன் original 'King Features Syndicate' நிறுவனத்தினரால் 19-5-1973 முதல் 18-8-1973 வரை வெளியிடப் பட்டது.

Al Williamson [Artist ] மற்றும் Archie Goodwin [script writer ] combination -ல் உருவான அசத்தல் கதைதான் மரண வலை.

மில்லியனர் செபாஸ்டியனால் திகில் தீவிற்குக் கடத்தப் பட்ட சீக்ரட் ஏஜென்ட் பில் காரிகனும் இன்னும் சிலரும் வேட்டையா , விளையாட்டா என்று யூகிக்க முடியாத அளவிற்கு அதிபயங்கர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட , அதில் கடைசி ஒருவர் மட்டுமே உயிர் தப்பும் வாய்ப்புள்ளது என்று லேசாக சந்தோஷப் படக் கூட முடியாத படி , எஞ்சி இருக்கும் ஒருவருக்கும் இறுதியில் உயிரும்,உடலும் தங்குமா என்னும் கேள்விக்கு விடை காண நீங்கள் விரும்பினால் மரண வலைக்குள் நுழைவதுதான் ஒரே வழி ! [அப்பாடா .... சாண்டில்யன் பாணியில் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பது இப்போது புரிகிறது !!!]

இதே காமிக்ஸ் பல வருடங்கள் கழித்து Indian express நாளிதழில் 1989-ல் தொடராக வெளி வந்தது. உடன் தினமணியிலும் தமிழில் வெளி வந்திருக்க வாய்ப்புள்ளது.









மீண்டும் ராணி காமிக்ஸில் மரணத் தீவு என்ற பெயரில் [ வெளியீடு எண் - 415] அக்டோபர், 2001-ல் வெளி வந்தது.








இதே கதையோட்டப் பாணியில் starblazer காமிக்ஸில் Killer robot என்ற விண்வெளிக் கதை [வெளியீடு எண் -6] 1979-ல் வெளி வந்துள்ளது.





















 








முத்து காமிக்ஸில் வெளி வந்த மரண வலையும் [வெளியீடு எண் - 92] மாலைமதியில் வந்த மரண வலையும் வெவ்வேறு கதைகள் .

                   

 


























   முத்து காமிக்ஸ் - மரண வலையிலும்  கர்ரிகன்தான் ஹீரோ .  ரத்னா காமிக்ஸில் மரண வலை என்ற பெயரில்  வந்த சித்திரக் கதையில் மட்டும் டார்ஜான் ஹீரோ. ஆச்சரியமாக, ராணி காமிக்ஸில் வந்த 500 வெளியீடுகளில் மரண வலை என்ற தலைப்பில் எந்த புத்தகமும் இல்லை.






அண்மையில் IDW நிறுவனத்தினரால் Al Williamson , Archie Goodwin combination -ல் உருவான அனைத்துக் காரிகன் கதைகளும் [1967-1980] வெளியிடப் பட்டன. அதில் முத்து மற்றும் மாலைமதியில் வந்த இரண்டு 'மரணவலை ' களையும் காணலாம்.

Al Williamson-ன் நுணுக்கமான ஓவியத் திறன் IDW வெளியீடுகளில் தெளிவாகப் புலப் படுகிறது [தரமான தாள் மற்றும் சிறியதாக்கப்படாத ஓவியங்கள் காரணமாக இருக்கலாம் ].







Al Williamson , Archie Goodwin combination -ல் கடைசியாக உருவான காரிகன் கதை லயன் காமிக்ஸில் எதிரிக்கு எதிரி [வெளியீடு எண்- 94]என்ற பெயரிலும் ,இந்திரஜால் காமிக்ஸில் The crimial genius [V21 N21]என்ற பெயரிலும் வெளி வந்தது.




 




உலகப் புகழ் பெற்ற கர்ரிகன் சித்திரத் தொடரிடமிருந்து விடை பெறுவதை , தங்கள் கடைசி strip -ல் Archie Goodwin நமக்குக் குறிப்பாக உணர்த்துவதை கவனிக்கவும் [END -Not bad at all ]!

Al Williamson-ம் தன் பங்குக்கு ,symbolic ஆக சூர்ய அஸ்தமனத்தை வரைந்திருக்கிறார் !!











 
Secret Agent -ஐ ஜனவரி ,1934-ல் உருவாக்கியது Dashiell Hammett மற்றும் Alex Raymond
[ நம் அபிமான Rip kirby மற்றும் Flash Gordon ஓவியத் தொடர்களையும் உருவாக்கியது Alex Raymond தான் ]. ஆரம்பத்தில் பெயரில்லாமல் X -9 என்று அழைக்கப் பட்ட Secret Agent பல வருடங்களுக்குப் பிறகே Phil Corrigan என்ற பெயரைப் பெற்றார். பெயர் சூட்டியவர் Mel Graff என்ற ஓவியர்.

1980 முதல் 1996 வரை George Evans கதை,ஓவியம் இரண்டையும் கவனித்துக் கொண்டார். இந்திரஜால் காமிக்ஸில் வந்த காரிகன் கதைகளில் பெரும்பாலானவை George Evans உருவாக்கியவையே. இவரது ஓவியங்கள் என்னைப் பொருத்த வரை சுமார் ரகம்தான்.







வான் வெளி சர்க்கஸ் , பிணம் காத்த புதையல் , மர்ம முகமூடி, இரத்தமில்லா யுத்தம் , ஒரு பனிமலை பயங்கரம் போன்ற சில கதைகளைத் தவிர முத்து மற்றும் லயன் காமிக்ஸில் வெளி வந்த பெரும்பாலான காரிகன் கதைகள் Al Williamson வரைந்தவையே. மேலும் மாலைமதி மற்றும் மேகலா காமிக்ஸில் வந்த பெரும்பாலான காரிகன் கதைகள் Al Williamson வரைந்தவைதாம். Al Williamson-க்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் !







13 comments:

  1. சீக்ரெட் ஏஜெண்ட் காரிகன் கதைகள் வராத நேரத்தில் அவரைப் பற்றிய தொகுப்புகளை வெளியிட்டது மகிழ்சியே. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Thanks, Kaleel sir. வைரஸ் X , காணாமல் போன கலைப் பொக்கிஷம் போன்ற கதைகளையும் , கதைகளின் ஹீரோ காரிகனையும் மறக்க முடியுமா?

      Delete
  2. Hi,

    Very,Very Detailed Post.

    Going By The Style and Coherence of the Post,You Must Be a Seasoned Blogger.

    If Not, You've Just Posted Hell Of a Post As Your 2nd.

    Congrats & Keep Posting.

    ReplyDelete
  3. Dear Sir,

    இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம் :-)

    //உலகப் புகழ் பெற்ற கர்ரிகன் சித்திரத் தொடரிடமிருந்து விடை பெறுவதை , தங்கள் கடைசி strip -ல் Archie Goodwin நமக்குக் குறிப்பாக உணர்த்துவதை கவனிக்கவும் [END -Not bad at all ]!

    Al Williamson-ம் தன் பங்குக்கு ,symbolic ஆக சூர்ய அஸ்தமனத்தை வரைந்திருக்கிறார் !!// I LIKE THESE DETAILS & YOUR VIEW, VERY MUCH

    எதிர்பார்த்ததைப் போல் ஓவியர்களைப் பற்றிய தகவல்களுடன் கூடிய கலக்கல் பதிவு.

    தொடர்ந்து உங்களின் காமிக்ஸ் அனுபவங்களை உங்களின் பாணியில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. Thanks Soundar . இருப்பினும் அதிக எதிர்பார்ப்பு →→→ அதிக tension [ எனக்கு] !!
    ப்ளாக் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பதையும் புரிந்துக் கொண்டேன் . இரண்டு பதிவுகளுக்கே மூச்சுத் திணறுகிறது! பல பதிவுகளை அனாவசியமாக வெளியிட்ட உங்களுக்கும், Viswa sir ,Kaleel Sir , krishna மற்றும் பல senior blogger -களுக்கும் தலை வணங்குகிறேன் !!!

    ReplyDelete
  5. Wow சூப்பர் பாேஸ்ட் சார் பல புதிய அரிய தகவல்கள் அடங்கிய பதிவு.
    காரிகன் எனக்கு ஏனாே பிடிக்கவில்லை குறைந்த ஆக்சன் காரணமாக இருக்கலாம்.
    உங்களுக்கு அவரை மிக பிடிக்கும் என்பது உங்கள் பதிவில் இருந்தே தெரிகிறது.
    இப்பதிவு உங்களது தாெடரும் பதிவுகளின் மீது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.
    Happy blogging sir.

    ReplyDelete
    Replies
    1. Thanks Krishna .
      காரிகனைப் பிடித்தவர்கள் ஏராளம் . பிடிக்காதவர்களும் ஏராளம் !
      Tastes differ !!

      Delete
  6. அருமையான பதிவு நண்பரே... secret agent X-9 Corrigan பற்றிய இந்த பதிவு என்னை என் சிறு வயதிற்கே இட்டு சென்றது... நன்றிகள் பல மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்!!!

    ReplyDelete
  7. அருமையான பதிவு. சில காரணங்களால், வலைப்பூ தளங்களுக்கு வருவதை முற்றிலும் தவிர்த்து வந்தேன். காரிகனைப் பற்றிய உங்கள் பதிவினை fb-யில் சௌ பகிர்ந்திருந்ததை தொடர்ந்து இங்கு வந்தேன்.

    எனக்கு பிடித்த காமிக்ஸ் ஹீரோக்களை வரிசைப்படுத்தச் சொன்னால், முதல் 10-க்குள் காரிகன் இடம் பிடிப்பார்.

    ஃப்ளாஷ் கார்டனுக்கு அடுத்து அதிக அளவில் விஞ்ஞான புதினக் கதைகள் காரிகனின் வரிசையில் இடம் பெறுவதும், ஒரு ஆங்கில சினிமா பார்ப்பதான உணர்வை ஆக்‌ஷன் நிறைந்த ஒவியங்கள் வெளிப்படுத்துவதாலும் காரிகன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஹீரோ.

    வாழ்த்துக்கள், பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  8. நன்றி. என்னுடைய 'காமிக்ஸ் ஹீரோக்கள் Top 10' லிஸ்ட்டிலும் காரிகனுக்கு எப்போதும் ஒரு இடமுண்டு.

    ReplyDelete
  9. உங்களுடைய fb விமர்சனத்திற்கும் என் நன்றி [ நல்ல மனநிறைவை தந்த பதிவு. வேதாளர், மாண்ரெக், ஃப்ளாஷ்கார்டன், இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட் போன்ற ஹீரோக்களுக்கு அடுத்தபடியாக ஒரு படி மேலே நான் வெகுவாக எதிர்பார்த்தவர் காரிகன்-https://www.facebook.com/groups/lionmuthucomics/] .
    Mr .Vinoj Kumar [ மாயாபுரி மாயவலை- அருமையான பதிவு. அல் வில்லியாம்சன்னின் அழகோவியத்திற்க்காகவே படிக்க தூண்டும் கதைகள் காரிகனுடையது] அவர்களுக்கும்,
    Mr .Rafiq Raja [இத்தனை அரிய கதைகளை படித்து அவற்றை கோர்வையாக்கி பதிவாகி வெளியிட்டதில் அவர் காமிக்ஸ் ஆர்வம் தெள்ளதெளிவு.... தொடரட்டும் நண்பரின் சேவை-https://www.facebook.com/groups/lionmuthucomics/] அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete